இருள் என எண்ணாமல் சோதனைகளை வெற்றி வாய்ப்பாக மாற்றியவர் : அவசியம் படிக்க வேண்டிய செய்தி..!!

சோதனைகள் ஏற்பட்ட உடனேயே வாழ்க்கையில் இருள் கவிழ தொடங்கிவிட்டது என எண்ணி வேதனை அடையக் கூடாது. நம்முடைய திறமைக்கு அது ஒரு சவால் என்கிற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவர் எழுதிய கதை ஒன்று லண்டன் தேவாலயத்தில் வேலை பார்க்கும் பணியால் வயோதிக எழுத படிக்க தெரியாதவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தேவாலயத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார் தேவாலயத்தின் பொறுப்பினை ஒரு புதிய பாதிரியார் ஏற்க்கிறார். எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பணியாளனாக இருப்பதை விரும்பவில்லை…

ஒரு நாள் அவரை அழைத்து எழுத பிடிக்க கற்றுக் கொள்ளும்படி சொல்கிறார் அந்த வயதில் அது சாத்தியமில்லை என்று அவர் சொல்ல அப்படியானால் உனக்கு ஒரு மாத கால அவகாசம் தருகிறேன் அதற்குள் அந்த முயற்சியில் நீ ஈடுபடவில்லை ஆனால் உன்னை வேலையை விட்டு நீக்குவதை தவிர வேறு வழியில்லை எனக்கு என்று கூறி அவ்வாறே ஒரு மாதம் ஆனப்பின் அவரை வேலையில் இருந்து நீக்கியும் விடுகிறார். அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் கொண்டவர் வேலையை விட்டு நீங்கிய தினத்தன்று மாலை வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் போது சுருட்டு பிடிக்க நினைக்கிறார் அவரிடம் சுருட்டு இல்லை பக்கத்தில் உள்ள கடைக்காரரிடம் கேட்டுப் பார்க்கிறார் கிடைக்கவில்லை. அவர் யோசித்தபோது தன்னைப் போல பலரும் இந்த தெருவில் போகும் போது சுருட்டு பிடிக்க எண்ணி அதற்காக கஷ்டப்பட்டு இருப்பார்களோ என எண்ணி உடனே அங்கே ஒரு சுருட்டு கடை வைக்க முடிவு செய்து சில தினங்களிலேயே தொழிலை தொடங்கினார். சில ஆண்டுகளில் பெரிய புகையிலை வியாபாரியாக மாறிவிடுகிறார் ஒருநாள் வங்கிக்கு செல்கின்றபோது ஒரு பாரதத்தில் அவர் கையெழுத்திட வேண்டி இருக்கிறது படித்து பார்த்து கையெழுத்து போட சொல்கிறார் மேனேஜர். அவரையே படித்துக் காட்டும் படி அவர் கூறுகிறார் அப்போதுதான் தனக்கு எழுத படிக்கத் தெரியாது என்ற விவரத்தை மேனேஜரிடம் சொல்கிறார் ஆச்சரியமடைந்த அவர் எழுத படிக்கத் தெரியாத நிலையில் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள் எழுத படிக்க தெரிந்திருந்தால் இன்னும் எந்த நிலைக்கு உயர்ந்திருப்பீர்களோ என்று கூறினார். அதைக்கேட்டு சிரித்த அவர் எழுத படிக்க தெரிந்திருந்தால் தேவாலயத்தில் நான் ஒரு சாதாரண பணியாளராகவே வேலையில் தொடர்ந்து இருந்திருப்பேன் என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். வேலையை விட்டு நீக்கப்பட்டது அவருக்கு ஒரு சோதனையாகிற்று. அதைக் கண்டு அவர் அஞ்சவில்லை அந்த சோதனையினை தனக்கு ஒரு வாய்ப்பாகி கொண்டார். இதை வெறும் கதை என எண்ண வேண்டாம் வாழ்க்கையில் நெருக்கடியில் பலர் உள்ளனர். அந்த நெருக்கடிகளையே சவால்களாக ஆக்கிக் கொண்டு மிகப்பெரிய நிலைக்கு உயர்ந்தவர்களும் உண்டு வாழ்க்கையில் கஷ்டங்களை எவன் தனக்கு சாதகமாக்கி கொள்ள பழகுகிறானோ அவனை சாதனைகளையும் புரிகிறான். சோதனை இருள் என எண்ணி அந்த இருட்டில் மூழ்க தொடங்கி விட்டால் வாழ்க்கையில் வெளிச்சம் எது இருள் எது என்று தெரியாமல் போய்விடும். வெளிச்சம் வந்தே தீரும் என்பதையும் நாம் நம்ப வேண்டும் இருட்டுக்கு பழகி அதிலேயே வாழ்ந்து விடுவோம் என எண்ணுவது கோழைத்தனம் சோதனைகளை இருட்டு என எண்ணாமல் வெளிச்சத்தை தர போகின்ற கைவிளக்கு என நாம் ஏற்றுக் கொண்டால் அந்த கை விளக்கு ஏற்றுவதற்கான வழிவகைகளும் நமக்கு புலப்படும்..!!

Read Previous

பொறாமை மனித மனதில் நீடிக்கும் தீய குணம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?.. சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular