இருவருக்குள் இருக்கும் தேடுதல் தான் காதல்..!!

இரண்டு இதயங்களுக்குள் தேடப்படும் வலிகளும் வரிகளும் தான் இங்கு காதலாக செதுக்கப்படுகிறது..

காதல் என்பது இதயங்கள் இதயங்களும் சேர்ந்து கண்கள் கண்களும் வார்த்தைகளை மொழி பெயர்த்து வார்த்தைகளே இல்லாமல் கண்ணசைவில் காதல் கொண்டு மொழிகளே இல்லாமல் மௌன சண்டையிட்டு ஆறுதல் மொழிகளுக்கு அடுத்தவர்களை நாடாமல் தனது கைக்குள் உள்ள அலைபேசி மூலம் ஆயிரம் மன்னிப்பு கேட்டு ஒரு மனதை கரைய வைப்பதற்கு இன்னொரு மனது போராடும் போராட்டமே காதலுக்குள் ஏற்படும் ஆகச்சிறந்த போராட்டம் ஆகும், அந்தப் போராட்டத்தில் இருவரும் தோற்பதே இல்லை ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டு ஒருவருக்குள் ஒருவர் அன்பை செலுத்திக்கொண்டு ஏதோ ஒரு மூலையில் தங்களை தொலைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் காதல் செய்கின்ற அந்த தருணம் தான் காதலின் உச்சநிலையை அடைவதற்கான தருணம் ஆகும், சண்டை வந்த பின்பும் சாரி சொல்லாமல் சச்சரவுகள் ஏற்படாமல் தள்ளி நின்று பார்க்க முடியாமல் அவள் நினைவுகளில் தடுமாறும் எனது விழிகளும் மொழிகளும் நரகத்தில் எண்ணெயில் போட்ட பிணத்திற்கு சமம், அவள் வாயசைவில் வானத்தையும் அவள் கையில் சேர்ப்பேன் அவள் கண்ணசைவில் காலுக்கு கீழ் உள்ள பூமியையும் பூவாக பரிசளிப்பேன் அவள் வாய் திறந்து பேசினால் என் ஆயுளையும் சுருக்கி இதயமாகவே பரிசளிப்பேன், இப்படி தான் ஒவ்வொரு காதலும் இதயத்துக்குள் பூட்டி இருக்கிறது..!!

Read Previous

சிக்கன் மற்றும் மட்டன் இவற்றில் எது உடலுக்கு நல்லது..!!

Read Next

வருத்தப்பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular