
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள அயிலாப்பேட்டையை சேர்ந்தவர் ராஜவேல் வயது 29. இவர் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் கரூரைச் சேர்ந்த நாகராஜ் கலைச்செல்வி கீதா ஆகிய மூன்று பேரும் மற்றொரு காரில் வந்தனர். இருக்கார்களும் திண்டுக்கரை அருகே வந்தபோது எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் ராஜவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொரு காரில் வந்த நாகராஜ் கலைச்செல்வி கீதா ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய நாகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.