இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தந்தை, மகன் பலி..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையை சேர்ந்தவர் இக்னீசியஸ். இவர் தன்னுடைய மகன் ஜோனாத்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சிவகங்கை கீரனூர் அருகே எதிரே வந்த கார் மீது இவர்கள் பயணித்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு காரும் பலத்த சேதமடைந்தது. உடனே அங்கிருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இக்னீசியஸ், மகன் ஜோனாத்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Read Previous

போன முறை உதய சூரியன்..!! இந்தமுறை தாமரை..!!

Read Next

7ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை – ஆசிரியர்கள் மீது வழக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular