
உத்திரபிரதேச மாநிலத்தில் ரயில் விபத்தில் தனது வலது கை மற்றும் இரண்டு கால்களை இழந்த நிலையில் மனம் தளராமல் யூ பி எஸ் சி தேர்வு எழுதிய இளைஞர் சுராஜ் திவாரி வெற்றி பெற்றுள்ளார் .
என் மகன் மிகவும் தைரியசாலி என்னை அவன் பெருமைப்பட வைத்துள்ளான் என்கிறார் சுராஜ் திவாரியின் தந்தை ரமேஷ் குமார், மேலும் என் மகன் கடின உழைப்பாளி எப்பொழுதும் துவண்டு போனதில்லை என்கிறார் சிவராஜ்திவாரி யின் தாய் ஆசா தேவி.
இதே போல் டெல்லி காவலர் ஒருவர் தனது மனைவியின் துணையுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சைபர் கிரைம் பிரிவில் ராம் பஜார் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஏற்கனவே ராம் பஜன் ஏழு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இருந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் சளைக்காமல் தேர்வுகளுக்கு முயற்சி செய்து கொண்டே இருந்தார் தற்பொழுது அவர் எட்டாவது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 667 வது இடத்தில் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.