இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்..? என்ன தெரியுமா..?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவரும் அறிந்தது. அது ஒரு மகா காவியம் ஆகும். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் கூறுகின்றோம்.

இந்நிலையில் இறக்கம் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு பரமாத்மா கிருஷ்ணன் பதில் கூறியதுதான் இந்த பதிவில் நாம் காண போகிறோம்.

100 கௌரவர்கள் மற்றும் பீஷ்மரும், கர்ணனும், அவர்களது குருவும் துரியோதனனிடம் நின்று அவனுக்காக போரிட்டனர். இப்படி அனைவரும் இறந்துவிட துரியோதனன் ஒருவன் மட்டுமே எஞ்சி இருந்தான். தனது 100 பிள்ளைகளில் ஒருவனாவது உயிரோடு இருக்க வேண்டும்  என்ற நினைப்பில் தான் அத்தனை நாள் கண்களை மூடி தன் கணவனுக்காக இருந்ததை தனது மகனுக்காக துரியோதனனின் தாய் தனது அத்தனை சக்தியும் சேர்த்து வஜ்ரமான உடலை துரியோதனனுக்கு தந்தார் துரியோதனனின் தாய்.

அந்த வஜ்ரமான உடலை யார் என்ன செய்தாலும் ஒன்றும் செய்ய இயலாது, அத்தனை பலம் பொருந்திய பீமன் தனது கதாயுதத்தால் அடித்தாலும் கூட அவனுக்கு ஒன்று ஆகவில்லை. இதனால் பெரும் இறுமாப்பில் இருந்தான் துரியோதனன். என்னதான் துரியோதனனின் தாய் அவனது உடலை வஜ்ரமாக மாற்றினாலும் இடுப்பிற்கு கீழ் அது வஜ்ரமாக மாறவில்லை. அதனை அப்படியே அறிந்த பீமன் துரியோதனன் தொடைகளை தனது கதாயுதத்தால் பிளந்து அவரை சாகடித்தான்.

அப்படி அவனது தொடையை பிளந்து ரத்தம் ஓடும் நிலையில் கூட அவனது எண்ணத்தில் மூன்று கேள்விகள் அவனை சாகவிடாமல் தடுத்து இருந்தது. அவனால் வாய் பேச முடியாவிட்டாலும் கிருஷ்ணர் அதை கண்டுபிடித்தார். உடனே கிருஷ்ணர் துரியோதனிடம் “துரியோதனா உனக்கு என்ன பதில் வேண்டும் நான் சொல்கிறேன் என கேட்டார்”,

  1. நான் ஆஸ்தினாபுரத்தை சுற்றி கோட்டை சுவர்கள் எழுப்பி இருந்தால் என்ன செய்திருப்பாய்?
  2. நான் அஸ்வத்தாமனை சேனாதிபதியாக நியமித்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
  3. நான் விதுரரை போர் புரிய வைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

இதுதான் துரியோதனன் மனதில் தொலைத்துக் கொண்டிருந்த மூன்று கேள்விகள்.

கிருஷ்ணன் பதில் சொல்ல ஆரம்பித்தார் “துரியோதனா நீ ஆஸ்தினாபுரத்தை  சுற்றிலும் கோட்டை சுவர்களை எழுப்பியிருந்தால் நான் நகுலனை கொண்டு அந்த கோட்டை சுவர்களை தகர்த்து இருப்பேன். நகுலனை போல் குதிரை ஓட்டுபவர்கள் யாரும் கிடையாது, ஒரு மழைத்துளி விழுந்து அடுத்த மழைத்துளி விழும் போது அந்த மழைத்துளியை தாண்டும் அளவிற்கு திறமை  படைத்தவன் அவன். அப்பேர்பட்டவனை கொண்டு உனது கோட்டை சுவர்களை தகர்த்தெறிய வைத்திருப்பேன்”, என்று கூறினார்.

“சேனாதிபதியாக அஸ்வத்தாமனை நியமித்திருந்தால் நான் தர்மனை கோபப்பட வைத்திருப்பேன். ஏனென்றால் எப்பேர்பட்ட வீரனாக இருந்தாலும் தருமன் கோபப்பட்டால் அவர்கள் எரிந்து சாம்பல் ஆகிவிடுவார்கள், எனவே நான் தருமனை கோபப்பட வைத்திருப்பேன்”, என கிருஷ்ணர் கூறி முடித்தார்.

மூன்றாவது கேள்வியாக “நீ விதுரரை போர் புரிய வைத்திருந்தால் நானே களத்தில் இறங்கி அவருடன் போர் புரிந்திருப்பேன்”, என்று அவர் கூறினார். இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்து மனம் சாந்தி பெற்ற பின் துரியோதனன் உயிர் பிரிந்தான்.

Read Previous

எப்பேர்பட்ட சிறுநீரக கல்லையும் வெளியேற்றும் அற்புத பானம்..!!

Read Next

வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது எப்படி மற்றும் அதன் பலன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular