இறந்தும் உயிர்வாழும் பெண்மணி..!! மூளைச்சாவடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புக்கள் தானம்.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் எழில் நகரில் வசித்து வருபவர் சசிகுமார். இவரின் மனைவி சத்யா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில், மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று எதிர்கால படிப்புக்காக காத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் 41 வயதுடைய சத்யாவுக்கு அவ்வப்போது தலைவலி ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 17ஆம் தேதி அங்குள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை சத்தியா மூளை சாவடைந்தார். இந்த விஷயத்தை அறிந்த குடும்பத்தினர் பெரும் கவலைக்கு உள்ளாக்கினார். மேலும் அவரின் உடல் உறுப்பு தானமாக வழங்க குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து குடும்பத்தினர் சத்யாவின் இதயம், கல்லீரல், கிட்னி, கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த சத்யாவின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

Read Previous

85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!! 57 வயது மதுபோதை ஆசாமி அதிர்ச்சி செயல்.!!

Read Next

தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை.,!! சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular