இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி!!!!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் சிப்கதுல்லா, ஹாரூன் மற்றும் கபீர் உயிரிழந்த சம்பவம், உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.உயிரிழந்த வீரர்களின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.இச்சம்பவம் இருநாடுகளிடையேயான ஏற்கனவே பதற்றமுள்ள உறவினை மேலும் நெருக்கடிக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது. சமூக ஊடகங்களிலும், உலகளாவிய அளவில் இந்த தாக்குதல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. வலைத்தளவாசிகள் பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.




