
பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை..
சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை..
தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை..
நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள *ஒருவர் இருக்கும் வரை..
குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை..
கண் பார்வையில் உங்கள் சோகங்களை கணிக்க
ஒருவர் இருக்கும் வரை..
நீங்கள் அழைத்தால் உடனே வந்து உதவிசெய்ய
ஒருவர் இருக்கும் வரை…
போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை..
வீட்டில் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை..
தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..
போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை..
மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..
உங்கள் கஷ்டத்தை பார்த்து துடிக்க
ஒருவர் இருக்கும் வரை…
நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை..
எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை..
உனக்குத் தேவை இப்போ பணம் தானே நான் தருகிறேன் என்று கூற
ஒருவர் இருக்கும் வரை..
கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை..
நம் தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை..
துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
ஒருவர் இருக்கும் வரை..
மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை
நட்புக்கு இலக்கணமாய் நண்பர்கள்
பலர் இருக்கும் வரை
நம் சுக துக்கங்களில் பங்கெடுக்க சொந்தங்கள்
கூட்டம் இருக்கும் வரை
மட்டுமே..
நாம் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்…
இந்த உலகம் இன்னும் பல கோடி ஆண்டுகள் ஓயாது சுழலும்.
இதில் நாம் வாழும் காலம் மிகவும் *வெறும் சொற்ப நாட்களே..
வாழும் காலத்திலேயே வாழ்ந்து விடுங்கள்…
நல்ல மனிதர்களின் நட்பை விட்டு விடாதீர்கள்….
உறவினர்களையும் நண்பர்களையும் அடிக்கடி சந்தித்திடுங்கள். பாராட்ட நினைத்தால் உடனடியாக பாராட்டி விடுங்கள்
வாழ்த்த நினைத்தால் உடனடியாக அவர்களை வாழ்த்தி விடுங்கள்
உதவி செய்ய வாய்ப்பு வந்தால் முடிந்ததை உடனே உதவிடுங்கள்…
நாம் வாழும் இந்த வாழ்வு அரியது! வசந்தமயமானது
இந்த உலகம் விசித்திரமானது… மேலும் அழகானது..
ஒருவருக்கு ஒருவர் புரிந்து வீட்டுக்கொடுத்து வாழ்வோம்
குறைகள் இருந்தால்.. யார் முதலில் என்று பார்க்காமல்… நாம் முன்னே பேசி… அந்த குறையைக் களைவோம்..
அன்பை பகிர்வோம் ஆனந்தமாய் வாழ்வோம்..!!