இறுதிச்சடங்கிற்கு சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி.!! சோகத்தில் குடும்பத்தினர்.!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறுதித் சடங்கிற்கு சென்றவரின் குடும்பத்தில் உள்ள மூன்று சிறுவர்கள் நதியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நதியில் மூழ்கி பரிதாபமாய் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அகர்வால் மாவட்டம் நல்கேடா பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் அங்கு உள்ள லகுந்தர் நதிக்கு உறவினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றனர்.  இறுதி சடங்கு நிகழ்ச்சியை நிறைவடைந்த பின் அனைவரும் நதியில் நீராடி உள்ளனர்.

அச்சமயம் இவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாய் உயிர் இழந்து உள்ளனர்.தகவல் அறிந்த மீட்பு படையினர் மோனு (வயது ஏழு), முஸ்கான் (வயது 8), பங்கஜ் (வயது 7) ஆகியோரின் சடலத்தை மீட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

Read Previous

வங்காளக்கரை ஓரத்திலே.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான வரவேற்பை அதிகரிக்க மெரினா பீச்சில் கிளிக்ஸ்.!!

Read Next

கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து..!! 20 பேர் உடல் கருகி பரிதாப பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular