இறைவனின் அருள் எளிதாக கிடைக்க வேண்டும் என்றால் இதனை சரியாக செய்து வர வேண்டும்..
இறைவனின் அருள் கிடைக்க வேண்டிய ஒரு தாரக மந்திரம், சிவபெருமானை போற்றுவதில் தாரக மந்திரமாக இருப்பது நமச்சிவாயா என்கிற பஞ்சாட்சர மந்திரம் ஆகும், நான் சிவபெருமானை முழு மனதோடு பிரார்த்தனை செய்கிறேன் வழிபாடு செய்கிறேன் என்பதை இதற்கான அர்த்தம் ஆகும், நாம் தினமும் காலையில் மாலையில் என 108 முறை இதனை இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நமது உடல் புத்துணர்ச்சி பெற்று மனம் ஆரோக்கியம் பெற்று சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் அதன் மூலம் நமது துன்பங்கள் துயரங்கள் விலகும் என்றும் ஐதீகம் கூறுகிறது, மேலும் ஓம் நமச்சிவாயா என்பது சிவபெருமானை நாம் அழைப்பதாகும். சிவனை அழைத்து நமது துன்பங்களை துயரங்களை மகிழ்ச்சியை சொல்வதற்கான ஒரு மூல மந்திரமாக இந்த மந்திரம் கருதப்படுகிறது, இந்த மந்திரத்தை கூறும் பொழுது மனம் தெளிவும் மன உற்சாகமும் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் கிடைக்கிறது என்று அறிவியல் ரீதியாக கூறுகின்றனர்..!!