
- இலந்தை பயன்கள் :
* வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.
* உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.
* உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
* இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.
* உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இந்த இலைகளை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
* இலந்தை பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
* 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74%, மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
* இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
* இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன.
* இலந்தை பழம் உண்பதால் மூளை புத்துணர்வு பெறும்.
* இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப் பயன்படுகின்றன.
* மரத்துப் பட்டையையோ, இலைகளையோ நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிருடன் கலந்து குடிந்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும்.
* மரப்பட்டையை அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து சிரங்குகள், உடம்பில் காயம்பட்ட இடங்களின் மீது தேய்த்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது.