
- இலந்தை வளர்ப்பு முறைகள் :
* இலந்தையில் பல இரகங்கள் உள்ளன. பனரசி, உம்ரான், கோலா, கைத்தளி, முண்டியா மற்றும் கோமா கீர்த்தி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
* அனைத்து மாதத்திலும் பயிர் செய்ய ஏற்றது இலந்தை மரம். ஆனால் மார்கழி மாதம் சிறந்த பருவம் ஆகும்.
* இலந்தையை உவர் நிலங்களில் வறட்சிப் பகுதிகளில் பயிரிடலாம். இருமண்பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.
* குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவிட்டு விதையை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் தரம் பிரிக்கப்பட்டு , பெரிய விதைகளை விதைத்துவிட வேண்டும்.
* நிலத்தை நன்கு உழுது 8 மிட்டர் இடைவெளியில் 1 மிட்டர் ஆழ, அகல மற்றும் நீளத்தில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு 2 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சி குழிகளை ஆறவிட வேண்டும்.
* 6- 12 மாதங்கள் ஆன நாற்றுகளை குழிகளில் நடவு செய்யலாம்.
* இளஞ்செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்பட்டு இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளை பெரிதாக அமைக்கவேண்டும்.
* எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு குறைவான நீர் போதுமானது.
* ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம், 1 கிலோ அளவுக்கு தழை, சாம்பல், மனிசத்துள்ள உரம் இட வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின் 30 கிலோ அளவுள்ள உரங்களை இட வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.
* பழங்கள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 70 – 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்