
இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! தினந்தோறும் எகிறும் தக்காளியின் விலை..!!
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெறும் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி சமீபத்தில் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோ 130 ரூபாய்க்கு விற்கபடுகிறது.