
இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க நச்சுனு “4 டிப்ஸ்”கண்டிப்பா இது எல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!
இன்றைய காலகட்டத்தில் விலைவாசி என்பது அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இந்நிலையில் இல்லத்தரசிகள் ஒரு சில டிப்ஸை எல்லாம் ஃபாலோ செய்தால் பணத்தை சேமிக்க முடியும். இல்லத்தரசிகள் பணத்தை சேமிக்க நச்சுன்னு நாலு டிப்ஸ் என்னென்ன இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் கவனம் செலுத்துவது என்னவென்றால் தேவை இல்லாமல் பகல் முழுவதும் லைட் எரிந்து கொண்டவரை இருப்பது பேனை போட்டுவிட்டு வெளியே சென்று ஒரு மணி நேரம் ஆகி வந்து பேனை ஆஃப் பண்ணுவது. தேவையில்லாமல் மோட்டார் போட்டு தண்ணீர் வழிந்து கால் மணி நேரம் கழித்து ஆப் செய்வது. இது போன்ற இடத்தில் எல்லாம் சற்று கவனமாக இருந்து சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். பண்டிகை காலத்தில் டிஸ்கவுண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யும் பொருட்களை அதிகமாக வாங்கி குமிப்பது இது ஒருபோதும் செய்யாதீர்கள். தேவைக்கேற்ப வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு பணத்தை வீணழிக்காதீர்கள். அது மட்டும் இன்றி உணவை வேஸ்ட் செய்யாதீர்கள். இதையெல்லாம் பாலோ செய்தாலே ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மால் சேமிக்க முடியும். சேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. சேமிப்பு என்பது இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவியாக இருக்கும்.