![](https://tamilyugam.in/wp-content/uploads/2025/01/images-2025-01-03T115425.375.jpeg)
இளநரைக்கான அற்புத மருந்து இதுதான்..!! கூந்தல் இளநரைக்கு வீட்டு மருத்துவ சிகிச்சை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இந்த இளநரை பிரச்சினை இருக்கின்றது. ஏன் ஐந்தாவது ஆறாவது படிக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சனை என்பது நாளடைவில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் இந்த இளநரை பிரச்சனைக்கு வீட்டிலேயே அற்புதமான மருந்து தயாரிக்கலாம். இளநரை காண அற்புதமான மருந்து என்றால் அது கருவேப்பிலை தினமும் முடிந்தளவு அதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி அதை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். அதே தண்ணீருடன் கறிவேப்பிலையை கொதிக்க வைத்து தினம் ஒரு வேளை குடிக்கவும். பசும்பாலில் தயாரித்த வெண்ணையால் தலைக்கு மசாஜ் செய்யவும். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. நெல்லிக்காயை அடிக்கடி உண்டால் இளநரை மாறும். நெல்லிக்காயை தூளாக்கி தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து அந்த எண்ணையை தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும். பச்சை வெங்காயத்தை அரைத்து ஸ்கால்ப்பில் தடவவும். அரை மணி நேரம் கழித்து அலாசவும். இவ்வாறு செய்தால், நாளடைவில் நரைமுடி மறைந்து ஆரோக்கியமான கூந்தலை நாம் பெற முடியும்.