இளநரையை இயற்கை முறையில் கருமையை மாற்ற இதை பயன்படுத்தினால் போதும்..!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது மிக எளிதான பாதிப்புகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு நம் வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணமாகும்.

இளநரை உருவாக காரணம்

  • ஊட்டச்சத்து இல்லா உணவு
  • ரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல்
  • தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருந்தல்
  • முறையற்ற தூக்கம்
  • மன அழுத்தம்

தேவையான பொருட்கள்

  • இடுகாட்டு மல்லியின் இலை,
  • நெல்லிக்காய் எண்ணெய்
  • கற்றாழை ஜெல்
  • விளக்கெண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு இடுகாட்டு மல்லி இலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள நித்திய கல்யாணி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீரில் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பவுலில் வடிகட்டி அதனை எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதன் ஜல்லை தனியாக எடுத்து ஒரு பவுலில் சேகரித்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த ஜெல்லை நன்கு கலந்து அரைத்து வைத்துள்ள நித்திய கல்யாணி சாற்றில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

தொடர்ந்து இரண்டு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ளவும் பிறகு இதை தலை முடிகளில் வேர்கால் பகுதிகளில் படும்படி தடவி ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை என்று தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நரைமுடி அனைத்தும் கருமையாய் மாறிவிடும்.

Read Previous

பெண்களே நீர்கட்டி பிரச்சனையால் கஷ்டபடுகிறீர்களா..? இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

Read Next

தீராத நாள்பட்ட நெஞ்சு சளியை ஐந்தே நிமிடத்தில் குணமாக்கும் அற்புத மருந்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular