
திருப்பூர் – தாராபுரம் சாலை கே. செட்டிபாளையம் பகுதியில் சிலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் கே. செட்டிபாளையம் நாயக்கர் மஹால் அருகே செந்தில் காம்பவுண்டு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட குகன் ஜான் (வயது 32) மற்றும் ஒரு பெண் என 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.