பெங்களுருவில் தன்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் பெண்ணின் செல்போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் கேமரா பொருத்தி அந்த பெண் குளிக்கும் விடியோவை காட்டி மிரட்டிய நபர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய்குமார் என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணின் மொபைலில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அச்செயலி மூலம் மொபைலின் கேமராவை ஆன் செய்து இளம்பெண் குளிக்கும் வீடியோ, ஆபாச புகைப்படங்களை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்கும்படி மிரட்டியுள்ளார். நீண்ட மாதங்களாகவே இது தொடர்ந்த நிலையில் அந்த பெண் இந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த சஞ்சய்குமார் தலைமறைவாகியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




