இளம் பெண்ணுடன் லாட்ஜில் இருந்த வாலிபர் திடீர் தற்கொலை..!! நடந்தது என்ன..?

கோவை மாவட்ட விடுதியில் கேரளாவை சார்ந்த இளைஞர் ஒருவர் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சார்ந்த சதீஷ் என்கின்ற இளைஞர் ரூம் எடுத்து தங்கி உள்ளார். அவர் பெண் ஒருவருடன் தங்கி இருந்த நிலையில் நேற்று அவரின் அறையில் ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லாமல்  இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை அறிந்த காவல் துறையினர் விடுதிக்கு நேரில் சென்று பார்த்தனர், அப்பொழுது சதீஷின் உடல் தூக்கில் தொங்கியவறு கண்டெடுக்கப்பட்டது. பின் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சதீஷ் உடன் தங்கி இருந்த அந்த பெண் யார்..? என்றும் விசாரணை தொடரப்பட்டு வருகிறது.

Read Previous

கோவையை மையப்படுத்தி வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறதா? – பதறவைக்கும் தகவலை கூறும் நபர்..!! நிலவரம் என்ன..?

Read Next

சென்னையில் பெருஞ்சோகம் திருமணமான ஒரே நாளில் உயிரிழந்த மணமகன்..!! பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular