
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் “Post Office” சேமிப்பு திட்டங்கள் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதால், மிகவும் பாதுகாப்பாகவும், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி சலுகைகளை வழங்கும் திட்டங்களாக உள்ளன. அந்த வகையில், Post Office-ன் தொடர் வைப்பு நிதி, Recurring Deposit (RD) திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கணக்கு தொடங்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு 6.8% வட்டி வழங்குகிறது. மேலும், இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.100 தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் வரை நீங்கள் நீட்டித்துக் கொள்ளலாம். .
குறிப்பாக, இந்த திட்டத்தில் மாதாந்திர டெபாசிட்டுகளை சரியான நேரத்தில் தவறாமல் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதமாக 1% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இது 4 நாட்கள் தொடர்ந்தால் கணக்கு தானாகவே மூடப்படும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் முதலீடு செய்வதன் மூலம், ரூ. 17 லட்சத்தை நீங்கள் பெறலாம். அது எப்படி என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.