இளைஞர்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
திருவள்ளூரில் இளம்பெண் ஒருவர் 12 இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த செவிலியரான தேவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசார், தேவி தனது உறவுக்கார பையனான சாய்ராம் (19) என்ற இளைஞருடன் சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில், தேவி தனது தாய்மாமனை 6 ஆண்டுகள் காதலித்து ஏமாற்றியதும், இதேபோல் 12 இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி பணம்பறித்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.