இழிவுபடுத்த வேண்டாம்..!! விட்டுவிடுங்கள்..!! புறம் பேசி அலையாமல் உங்கள் வாழ்க்கைய வாழுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

இழிவுபடுத்த வேண்டாம்…

விட்டுவிடுங்கள்!!””

ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே
தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!

அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.

முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..

அது போதும்..

உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..

புறம் பேசி அலையாமல் உங்கள் வாழ்க்கைய வாழுங்கள்…..
பிறர் மீது குற்றம் காணாமல் உங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யுங்கள்..

Read Previous

ஏன் இரவு நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்கணும்?.. பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

மருந்து மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு..!! உங்கள் பாதுகாப்பிற்கான அடையாளம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular