இவர்கள் எல்லாம் அன்னாசிப்பழம் சாப்பிடவேக் கூடாது..!! என்னென்ன பக்கவிளைவுகள் தெரியுமா?..

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழங்களை சாப்பிடுவது நமது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தையும் சத்துக்களையும் கொடுக்கிறது.

அந்தவகையில், பழங்களில் ரா என அழைக்கப்படும் அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள் பி மற்றும் சி, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்சைம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அன்னாசிபழம் ஒரு சிலர் விரும்பி சாப்பிட்டாலும் ஒரு சிலர் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிடவே கூடாது. அது ஏன் தெரியுமா?

அன்னாசியின் பக்க விளைவுகள்:

அன்னாசிப்பழத்தில் அதிக குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளடக்கம் நிறைந்துள்ளது. சிலருக்கு அதிகமாக உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும்.

அன்னாசிப்பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது அதிக இரத்தப்போக்கு காரணமாக இருக்கும்.

அன்னாசிப்பழத்தின் அமிலத்தன்மையின் விளைவாக ஈறுகள் மற்றும் பல் பற்சிப்பிகள் மோசமடையக்கூடும். மேலும், இது வாய்வழி குழி மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம்.

செலியாக் நோய் இருப்பவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலி வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இரப்பை மற்றும் அமிலத்தன்மை பிரச்சினை இருப்பவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் இந்தப் பிரச்சினைகள் இன்னும் அதிகரிக்கும்.

அன்னாசியில் அதிகம் வைட்டமின் சி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது சிறுநீரக பிரச்சினை இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

Read Previous

SBI வங்கியில் வேலைவாய்ப்பு..!! 150 காலியிடங்கள்..!! Any Degree போதும்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

மிகவும் அருமையான பதிவு..!! அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் திண்ணையின் அருமை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular