இன்றைய சூழலில் பலரும் ஆரோக்கியமின்றி இருக்கின்றனர் இதற்கு காரணம் தூக்கமின்மை, உடல் சோர்வு, மனவேதனை, மற்றும் வேலை சுமை, என அடுக்கிக் கொண்டே செல்லலாம் அப்படி இருக்கும் பட்சத்தில் சில உடல் பயிற்சிகள் நமது உடலை புத்துணர்வாக வைத்திருக்கும்..
சாப்பிடும் உணவு செரித்து உடல் கழிவை வெளியேற்றினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும், அப்படியே உடலில் தேங்கினால் உடல் உபாதைகள் ஏற்படும், இதன் மூலம் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன், தேன் மற்றும் எலுமிச்சம் சாறு கலந்து குடித்து வந்தால் உடல் கழிவுகள் வெளியேறும், இஞ்சியை அரைத்து சாறெடுத்து அதனை குடித்து வந்தால் குடலில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறும், தினமும் மூன்று பல் பூண்டு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் எல்லாம் கரைந்து விடும், அன்னாசி மற்றும் பப்பாளி பழங்களை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் உடனடியாக வெளியேற்ற முடியும்..!!