
இவை 16 ஐயும் கடைப்பிடித்தாலே போதும்..!! உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் கூறிய வழிமுறை.!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிமுறைகளை நமக்கு கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய வழிமுறைகளும் அதற்குப் பின்னால் இருக்கும் மருத்துவ குணமும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் கூறிய எளிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உணவிடை நீரை பருகாதே..
கண்ணில் தூசி கசக்காதே..
கத்தி பிடித்து துள்ளாதே..
கழிக்கும் இரண்டை அடக்காதே..
கண்ட இடத்தில் உமிழாதே..
காதைக்குத்தி குடையாதே..
கொதிக்க கொதிக்க குடிக்காதே..
நகத்தை நீட்டி வளர்க்காதே..
நாக்கை நீட்டி குதிக்காதே..
பல்லில் குச்சி குத்தாதே..
பசிக்காவிட்டால் புசிக்காதே..
பசித்தால் நேரம் கடத்தாதே..
வயிறு புடைக்க உண்ணாதே..
வாயைத் திறந்து மெல்லாதே..
வில்லின் வடிவில் அமராதே..
வெற்றுத் தரையில் உறங்காதே..