இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை.
காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல,
பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான்.
இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.
இந்த பழைய பாடல் வரிகளைப் போல,
“ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”.
ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா….
நமது முழுவாழ்க்கையின் சேமிப்பு நமது உணவிற்காகவும், நமது பிற்கால சந்ததிகளின் உணவிற்காகவும் மட்டுமே.
இப்பிறவி எடுத்ததன் பயனே இன்பம் மற்றும் துன்பம் அனைத்து அனுபவங்களையும் பெற்று வாழ்வை சந்தோச மயமாக்குவதற்காக மட்டுமே.
உதாரணமாக,
தினமும் கடற்கரை ஓரமாக நடப்பவராக இருந்தால் குடிசைப்பக்கம் ஒரு நாள் நடந்து பார்ப்போம்.
மூன்று நேரமும் உணவு உண்பதற்கு பதிலாக ஒரு நேரம் நமது வயிற்றை பட்டினி போட்டுப் பார்ப்போம்.
இப்படி வித்தியாசமாக செய்யும் போது உலகமே வேறு விதமாக தோன்றும்.
ஏழ்மை மற்றும் பட்டினி பற்றி அறிய வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தையும் வாழ்வையும் மேலும் நன்றாக ரசிக்க முடியும்.
இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டரான மாகத்மா காந்தி, ஆங்கில உடை அணிந்து பழகியவர் வெறும் அரைத்துண்டு கட்டி உலவி ‘அஹிம்சை’ என்ற மந்திரத்தின் மூலம் நமக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.
அமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் ஷ்வைஸ்டர் ஆப்பிரிக்காவில் குடியேறி மருத்துவமனை திறந்து தொண்டாற்றினார்.
வாழ்க்கையை இரசித்தல்
கோபத்தை தவிர்த்தல், மகிழ்ச்சியைய் பெருக்குதல், கவலைகளை கைவிடுதல் இவையெல்லாம்
புதிய உலகின் பல வழிகள்.
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துகள்…
*ஒவ்வொரு நாளையும்
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்… மன அமைதியோடும்,,,
இந்த நாளை நல்லபடியாக முடிந்த நிம்மதியோடும் உறங்கச் செல்லுங்கள்,,
இறைவன் அருள் புரியட்டும்*
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்…