
காஸாவில் நேற்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவர்கள் உள்பட 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்,நிவாரணப் பொருள்களைப் பெறுவதற்காக கூடியிருந்தவர்கள், மாவாசி மண்டலத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள், காஸா சிட்டியில் பள்ளி ஒன்றில் அடைக்கலம் அடைந்திருந்த புலம்பெயர்ந்தோர் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலின் கோர தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.