இ.பி.எஸ் க்கு ரூபாய் 1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் சகோதரரான தனபால் கொடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி பற்றி அவதூறு பேசியிருந்தார், விபத்தில் இருந்த கனகராஜ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு தடைவிதிக்க கூறியும் ரூபாய் 1.10 கோடியை மான நஷ்ட ஈடாக வழங்க கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார், அதில் அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதிவி வகித்து வரும் தனது நட்பெயருக்கும் புகழுக்கும் களங்கும் விடுவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் தனக்கு எதிரான பொய்யான அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று கூறியிருந்தார், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் ஆணையர் எஸ் கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மனுதாரர் ஆன எடப்பாடி பழனிசாமி தொடர்பு படுத்தி பேசி தனபாலுக்கு ரூபாய் 1.10 கோடி பழனிசாமிக்கு வழங்கு உத்தரவிட்டார் மேலும் இனி அவரை தொடர்பு படுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்..!!

Read Previous

அதிக முட்டை சாப்பிட்டால் உண்டாகும் ஆபத்து தெரிந்து கொள்வோம்..!!

Read Next

செந்தில் பாலாஜி வழக்கு நவம்பர் 15ஆம் தேதி ஒத்திவைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular