
ஈக்வடார் சிறையில் கலவரம்…31 கைதிகள் பலி..!!
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் அவ்வபோது கைதிகள் மோதிக் கொள்வார்கள். இவ்வாறு மோதிக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழு தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
சில சமயங்களில் இந்த மோதல்கள் மிகப்பெரிய கலவரமாக உருவெடுக்கும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஈக்வடார் குவாயாகில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு இரு தரப்பினராக கைதிகள் பிரிந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அது அதிகார போட்டியாக உருமாறி கலவரமாக உள்ளது. இந்த கலவரத்தின் போது கைதிகள் கையில் கிடைக்கும் கத்தி கடப்பாறை போன்ற பொருட்களை வைத்துச போட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் 31 கைதிகள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.