
ஈரத் துணியை வீட்டிற்குள் காய வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
தினசரி வாழ்க்கையில் எப்படி குளிக்கிறோமோ சாப்பிடுகிறோமோ அதே போன்று தான் துணி துவைப்பதும் துணி துவைப்பது மட்டுமல்ல துணியை காய வைப்பதும் தான். இந்நிலையில் ஒரு சில காலங்களில் குறிப்பாக மழைக்காலங்களில் துணியை காய வைக்க முடியாது அதனால் வீட்டுக்குள்ளேயே துணியை காய வைப்போம். ஒரு சிலர் தன்னுடைய வேலை நேரம் காரணமாகவும் வீட்டிற்குள்ளேயே துணியை காய வைப்பார்கள். இவ்வாறு வீட்டுக்குள்ளேயே துணியை காய வைப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
வீட்டுக்குள்ளேயே துணியை காய வைப்பதால் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வீட்டிற்குள் வரும். இந்தக் கிருமிகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து பலவிதமான நோய்களை நமக்கு உண்டு பண்ணும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் விரைவாக இது நோய்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். மேலும் வீட்டுக்குள்ளே காய வைத்த உடைகளை அணியும் போது மூச்சுக்குழல் வழியாக இந்த கிருமிகள் நம் உடலில் நுழைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே துணியை துவைத்து வெயிலில் காய வைத்தால் தேவையில்லாத கிருமிகள் வெயிலில் காய வைக்கும் போது இறந்துவிடும் இதனால் நம் உடலும் ஆரோக்கியம் பெறும்.