ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி..!! நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்..!!

தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டி போடுவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டின் முக்கிய நடிகராக வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதோடு, கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கை மற்றும் கட்சி கொள்கை எதிரி என அனைத்தையும் திட்டவட்டமாக கூறினார். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி அரசியல் பயணத்தை நோக்கி ஓடத் தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில்  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே தற்போது அந்த தொகுதி காலியாக இருக்கிறது. இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு தவெக விஜய் இம்முறை களம் காண்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜய் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும், இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கூறியது, அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த வருடம் சுற்றுப்பயணம், பூத் கமிட்டி என கட்சியை பலப்படுத்த அனைத்து முயற்சிகளிலும் தவெக பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, வருகிற 2025 பிப்ரவரி மாதம் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நிதர்சனமான உண்மையான பதிவு..!! படித்துவிட்டு பகிருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு (ஆப்பு) குறிப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular