ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வரும் நிலையில், கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.




