
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பாது என பைடன் தெரிவித்துள்ளார்…!
ரஷ்யா மற்றும் உக்ரைக்கு இடையில் நடக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை அனுப்ப போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள், உக்ரேனிய வீரர்களின் பலத்தை அதிகரிக்க போர் டாங்கிகளை அனுப்ப முடிவு செய்திருந்தது.
ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரேனை ஆதரிக்கும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிடென் ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரைனுக்கு ஆதரவாக ஜெட் விமானங்களை அனுப்புவீர்களா என்று அதிபரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போருக்கு உதவ உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பப் போவதில்லை என்று பதிலளித்தார். பைடன் நட்பு நாடான போலந்துக்குச் செல்லப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.