
என்னதான் நாம் நவீன காலத்தில் வாழ்ந்து வந்தாலும் உலகம் விஞ்ஞானமயம் ஆகிவிட்டாலும் ஆன்மீகம், பேய்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்கள் குறித்த மர்மங்களும் உலாவி வருகின்றது.
இதில் ஏலியன் ஏலியன்கள் தானா..? கடவுளா..? என்ற தகராறும் வேறு ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னையைச் சார்ந்த மாந்திரீகவாதியான கருதப்படும் ரஜினி அம்மா முன்பு பில்லி சூனிய ஏவல் தொடர்பாக சில ஆன்மீக குறிப்புகளுடன் தனியா;h youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார், அந்த பேட்டியில் வீட்டு வாசலில் நிலை வாசலை ஒட்டி கண்ணாடி வைப்பது துஷ்ட தேவதை வீட்டிற்கு வந்தாலும் விரட்டி விடும்.
கருவண்டு வீட்டை சுற்றினால் செய்வினை வரப்போகிறது என அர்த்தம், கருவண்டு வீட்டிற்குள் வந்து விட்டால் செய்வினை வீட்டிற்குள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆந்தை வீட்டை பார்த்து கத்தக்கூடாது. வவ்வால் நமது வீட்டிற்குள் வரக்கூடாது. வவ்வாலிலும் ஏவல் வைத்து அனுப்புவார்கள். கருத்தேள் தொடையில் விழுந்தால் பெரும் ஆபத்து. நமது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் நமக்கு வரும் ஆபத்தை எதிர்கொண்டு தனது உயிரைத் தரும்.
கன்னிப்பெண்கள் நிறைவேறாத ஆசையுடன் உயிரிழந்ததால் தான் மோகினி ஆக இருப்பார்கள் இவர்கள் பெண், மோகினி, சின்னப் பெண் ஆகிய உருவம் கொண்டு இருப்பார்கள். மோகினி ஆணை பிடித்து விட்டால் ஆண்மை உரிந்து எடுத்து விடும் .பிடாரி தினமும் ரத்தத்தை உறிஞ்சும் என்று பல்வேறு வகையில் கூறப்படுகின்றது.