இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறது. இதற்கு காரணம் இன்றைய உணவு முறை, பழக்க வழக்கம் அனைத்தும் மாறியது தான். தற்போது, ஃபேட்டி லிவர் என்னும் சொல்லக்கூடிய கல்லீரல் கொழுப்பு அனைத்து இடங்களில் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. முன்பெல்லாம் இந்த நோய் அதிகமாக குடிப்பவர்களுக்கு மட்டுமே வரும். ஆனால் தற்போது குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த நோய் வருகிறது.
இதற்கு காரணம், அதிகமான அரிசி உணவுகளையும், அதிகம் சர்க்கரை உண்பதும், அதிக எண்ணெயில் சமைத்த பொருட்களை உண்பதும் ஆகும். மேலும், இந்த ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே வீட்டில் இருந்தபடி குணப்படுத்த முடியும்.
இதற்கு “இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்” என்று சொல்லக்கூடிய விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரதம் என்பது 8 மணி நேரம் உணவு உண்டபின் மீதி இருக்கும் 16 மணி நேரம் எந்த உணவும் உண்ணாமல் இடைவெளி விடுவது ஆகும். இதனால் கொழுப்புகள் கரைந்து லிவர் ஆரோக்கியமாகும். மேலும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை லிவர் சுத்தம் செய்யப்படும் நேரம் என்பதால் அந்த நேரங்களில் உண்ணாமல் இருந்து போதுமான அளவு தூங்குவது மூலம் இந்த ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.