உங்களுக்கு அடிக்கடி மூச்சுப்பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை கண்டிப்பாக ஒரு முறை செய்யுங்கள்..!! உடனடி பலன் கிடைக்கும்..!!

மூச்சுப்பிடிப்பு என்பது சாதாரணமான பாதிப்பு அல்ல, ஒருவருக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவரால் எளிதில் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்படுவார், மூச்சு விடும் பொழுதெல்லாம் ஒரு விதமான வலி ஏற்படும்.

முதுகை அழுத்துவது போன்ற உணர்வு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான எடை தூக்குதல் ,மார்பு எலும்புகளில் மேல் உள்ள தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த மூச்சுப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மூச்சு பிடிப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்

பெருங்காயத்தூள்,

சுக்குத்தூள்

கட்டி கற்பூரம்

செய்முறை

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதை நன்கு ஆரவிட்டு கஞ்சி கட்டி தன்மையை அடையும்,  கெட்டி தன்மைக்கு வந்த கஞ்சியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் நான்கு கலந்து வைக்கவும்.

பிறகு சிறிது அளவு கட்டி கற்பூரத்தை உடைத்து அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து வைத்துவிட்டு இந்த கலவையை மூச்சு பிடிப்பு பாதிப்பு உள்ள இடங்களில் தடவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூச்சு பிடிப்பு மட்டுமின்றி வாயு தொல்லை, இடுப்பு வலி, முதுகு வலி உள்ளிட்டவைகள் சரியாகும்.

Read Previous

உங்கள் உடல் பிட்டா இருக்க வேண்டுமா..? அப்போ இந்த பீட்டர் ஜூஸை செய்து குடித்து பாருங்கள்..!!

Read Next

தினமும் இது செய்து வந்தால் சர்க்கரை நோய் காணாமல் போய்விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular