உங்களுக்கு அந்த உணர்வைத் தூண்டும் உணவுகள் இவைகள் தானாம்..!!

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இவர்கள் அனைவரும் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காமத்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய்தார்கள். “அஃப்ரோடிசியாக்” (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான “அஃப்ரோடிசியாக்” என்பதிலிருந்து உருவானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் பட்டியலிடுவதற்கு முன் உருவம், சுவை மற்றும் வாசனை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான காமம் பெருக்கும் உணவு வகைகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் போன்ற உருவத்தில் அமைந்துள்ளன.
காலத்தைக் கணக்கிட முடியாத முன்னரே, இவ்வகையான இயற்கை காமப்பெருக்கும் உணவு வகைகள் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு, காமத்தைப் பெருக்கி இன்பத்தை அதிகரிக்கச் செய்வதில் மிகச்சிறந்த ஆற்றலுடையதாக திகழ்கின்றன.

ஒயின்
ஒயின் குடிப்பதால் நம்முடைய காம உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக காமத்தைத் தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களின் காம உணர்வுகளையும் மிகவும் நன்றாகத் தூண்டுகிறது. “பெண்களின் எதிர்ப்பு உணர்வுகளை மட்டுப்படச் செய்வதால், ஒயினானது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது” என்று டாக்டர்.சேத் என்பவர் குறிப்பிடுகிறார். ஆனால் மதுபான வகைகளை எப்பொழுதும் அதிகமாகக் குடிக்கக்கூடாது. அதிகமாகக் குடித்தால், அது ஒருவித மயக்க நிலையைத் தான் தரும்.

வாழைப்பழம்

ஆணுறுப்பைப் போன்ற இதனுடைய உருவம் மட்டுமின்றி, இதில் பல்வேறு சிறந்த தன்மைகள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் அடங்கியுள்ளன. குறிப்பாக இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்கச் செய்கின்றன. உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளதால், இது மிகுந்த சக்தியையும், நீண்ட நேரம் நீடிக்கும் இன்ப உணர்வையும் அளிக்கிறது.

கடல் சிப்பிகள்

முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மையான கடல் வாழ் உயிரினம் இது. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. கிரேக்கக் காதல் கடவுள்களான அஃப்ரோடைட் மற்றும் ரோஸ் ஆகியோர் கடலில் இருந்த ஒரு சிப்பியினுள் இணைந்து, அவர்களது மகனான ஈராஸை ஈன்றெடுத்தனராம். இதன் காரணமாக இது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இதனை உடைத்துப் பார்க்கும் போது, இது பெண்களின் இனப்பெருக்க உறுப்பு போன்றே தோற்றமளிக்கிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள அதிகப்படியான ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் (testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரும், பெண் பித்தருமான காஸநோவா என்பவர் ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம். அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை உலகமே நன்கு அறியும்.

பூண்டு இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், அவர்களது ஆணுறுப்பு விரைப்படைவதில் பிரச்சனை ஏதும் இருக்காது. ஆணுறுப்பினை விரைப்படையச் செய்யும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய மனதைக் கவர்வதனால், அவரது வயிற்றினை அடையும் உணவு மூலமாகக் கவரலாம் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே உங்களது அடுத்த வேளை உணவினை தயாரிக்கும் போது, அதில் பூண்டினைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ/வெண்ணெய்ப் பழம் (Avacado)

ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் இதுவாகும். இப்பழமானது கவர்ச்சியாக பெண்மை ததும்பும் வகையாக இருந்தாலும், மரத்தில் தொங்கும் போது இவற்றைப் பார்க்கையில், ஆண்களின் விதைப்பைகள் போன்று காட்சியளிக்கின்றன. மெக்சிகோவின் மையப் பகுதியில் பதினான்காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்’ என்றே அழைத்தனர். பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்தது இப்பழம். இவை அனைத்தும் மனிதர்களின் காம உணர்வைத் தூண்ட வல்லவை.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை நெடுக்குவாட்டில் இரண்டாக வெட்டினால், அது பெண் உறுப்பினைப் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். பழங்காலம் தொட்டே, அத்திப்பழமானது இனப்பெருக்கத்தோடு தொடர்புடையதாகவே இருந்தது. அத்திப்பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை தான்.

சாக்லெட்

ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine ) மற்றும் செரொடோனின் (serotonin ) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன. இவை நமது உணர்ச்சிப் பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் கூட்டுகின்றன. இதனால், நாம் சாக்லெட் சாப்பிடும் போது, நமது உணர்ச்சிப் பெருக்கும், ஆற்றல் நிலையும் உயர்ந்து, நமது காம உணர்வு (mood) தூண்டப்படுகிறது. ஃபீனைல் எத்திலமைன் உடன் அனன்டாமைடு (Anandamide ) என்னும் வேதிப்பொருள் சேர்ந்து, பாலுறவின் போது, உச்சக்கட்டத்தை அடைவதில் உதவுகின்றன.

துளசி

இனிமையான மணமுடைய இந்த மூலிகையானது இத்தாலியில், “நிக்கோலஸ், என்னை முத்தமிடு” என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுவதாக நம்பப்படுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.

Read Previous

உடலுக்கு வலிமை தரும் ருசியான சிக்கன் எலும்பு ரசம்..!! செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

ஊழியர்களின் அவல நிலை..!! வருங்காலத்தில் IT யில் வேலை கிடைக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular