உங்களுக்கு ஆட்டுத்தலை கறி பிடிக்குமா..!! அதில் உண்மையிலேயே நன்மை இருக்கிறதா..!!

நம் அனைவருக்கும் இறைச்சிகள் என்றாலே மிகவும் பிடிக்கும்.  மீன் கோழி ஆடு போன்ற இறைச்சிகளை சாப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது. அதில் இருக்கும் தசைகளை விட எலும்பு கறி தான் மிகவும் சுவையாகவும் இருக்கும். அதில் தான் சத்தும் அதிகமாக இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும்.

அப்படி ஆட்டுக்காலில் சூப் வைத்து குடித்தால் பல நன்மைகள் நமது உடலுக்கு வரும். அதனை உப்பு கண்டம் போட்டும் சாப்பிடுவார்கள். அதேபோல ஆட்டின் குடல் ஈரல் போன்றவை நிறைய பேர் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் ஆட்டின் தலை கறி சாப்பிடுவதனால் நன்மைகள் கிடைக்குமா என்று தெளிவாக காண்போம்.

ஆட்டின் தலைக்கறியை முக்கால்வாசி பேர் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் அதை சமைப்பது மிகவும் சிரமமாகும். ஆனால் அதில் இருக்கும் நன்மைகளோ அதிகம். உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவுகளில் முக்கியமானது ஆடு. கோழி இறைச்சியை சூடு என்று சாப்பிடாமல் இருக்கும் பலர் ஆட்டை சாப்பிடுவார்கள். ஆட்டின் மூளை தாது விருத்தியை தரும்.

நமது கண்களை குளிர்ச்சியாக்கும். அதுமட்டுமில்லாமல் நமது நினைவாற்றலை மேம்படுத்தவும் இந்த ஆட்டுத்தலை கறி உதவுகிறது. வலிமையான மூளைக்கு வழிவகுக்கிறது இந்த ஆட்டுக்கறி. ஆட்டின் மூளையை நமது உணவில் சேர்த்துக் கொள்வது கபத்தை நீக்கும். மேலும் மார்பகங்களில் ஏற்படும் புண்களை சரி செய்யும். மார்பகத்தின் வலிமையையும் அதிகரித்துக் கொடுக்கும்.

Read Previous

திணை அரிசி சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உடலுக்கு நன்மைகள் சேர்க்கும் சுரைக்காய் வடை..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular