இங்கு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பல பேர். ஏனெனில் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த நோய் இருக்கிறது. அப்படி நினைப்பவர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கொள்ளு சாப்பிடலாம். இந்தக் கொள்ளை வைத்து அடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு – ஒரு கிண்ணம்,
அரிசி – கால் கிண்ணம்,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு.
தாளிப்பதற்கு:
எண்ணெய் – ஒரு கரண்டி,
கடுகு, சீரகம், சோம்பு – கால் கரண்டி,
உளுந்தம் பருப்பு – ஒரு கரண்டி,
இஞ்சி – சிறிதளவு,
வெங்காயம் – 2,
பெருங்காயம் – சிறிதளவு.
செய்முறை:
முதலில் வெங்காயம் இஞ்சி ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டி எடுக்க வேண்டும். கொள்ளு மற்றும் அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து கட்டி இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
இதை இரண்டு முதல் மூன்று மணி நேரம் நன்றாக புளிக்க வைக்க வேண்டும். பின் தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கொள்ளு அடை தயார்.




