
சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை அளவை சீராக வைக்க இந்த ஒரு பானமே போதுமானது. அப்போ எல்லாம் வயசான சுகர் வரும்னு சொன்னாங்க. ஆனால் இப்போ காலம் மாறி போச்சு.
சின்ன குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாறிப்போன வாழ்க்கை முறை தான். நல்லா இருப்பாங்க. திடீர்னு சுகர் ஏறிடும். இதனால பல பக்க விளைவுகள் உடலில் ஏற்படும். இது சாதாரணமான விஷயம் கிடையாது.
இதற்கு கவனம் கொடுக்க வேண்டியது மிக அவசியம். இல்லை என்றால் இதுவே உயிர் கொல்லியாக மாறிவிடும். இந்த மாதிரி அடிக்கடி சுகர் ஏறுவதை தடுக்க வீட்டில் இருக்கிற துளசியே போதுமானது. துளசியில் அதிக அளவில் ஹைபோகிலிசிக் பண்புகள் உள்ளதால் இது ரத்த சர்க்கரை பண்புகளை குறைக்குமாம். மேலும் நீரழிவு நோய் உள்ளவர்கள் துளசியை தினமும் மென்று சாப்பிடலாம்.
இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் ஆறிலிருந்து எட்டு துளசி இலைகளை கொதிக்க வைத்து அந்நீரை குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் சுகரின் அளவு திடீரென்று ஏறாது. சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.