உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சினை உள்ளதா..? இந்த உணவை எல்லாம் தொடவே கூடாது..!!

மனிதர்களுக்கு வரும் ஒவ்வொரு நோய்க்கும் அந்த நோய்க்கு ஏற்றவாறு உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு வந்தால் அந்த பிரச்சினையில் இருந்து எளிதாக குணமாகி வெளியே வரலாம். அந்த வகையில் சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து கட்டுரையில் காண்போம்.

மனித உடலில் தாதுக்கள் அதிகளவில் சேரும்போது சிறுநீரகத்தில் கல் படிந்து சிறுநீரக கற்களாய் மாறுகிறது. எனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, வேர்க்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதை போல் சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் இனிப்பான உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிக அளவு புரதசத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் ஆட்டு இறைச்சி .மாட்டிறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக தக்காளியில் வைட்டமின் சி சக்தி அதிகமாக உள்ளது. எனவே சிறுநீரகங்கள் பிரச்சனையை இது அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது . சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். அப்போதுதான் சிறுநீர் கழிக்கும் போது கற்கள் அதன் வழியாக வெளியேறிவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Previous

பூண்டின் மகத்துவமான நன்மைகள்..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

Read Next

அல்சர் நோயினால் கஷ்டப்படுகிறீர்களா..? இதை ஒரே நாளில் குணமாக இந்த பானத்தை பருகினால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular