ஆடிப்பெருக்கு நன்னாளில் நகை பொருள் மற்றும் நிலம் என எதை வாங்கினாலும் அவை பன்மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது, இந்த நாளில் மங்களப் பொருட்களை நீரில் விட்டாலோ அல்லது அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கும்.
ஆடிப்பெருக்கு நாள் அன்று எல்லோரும் கோவிலுக்கு சென்று அல்லது நீர் நிலை சென்று தெய்வங்களை வணங்கி வந்தால் குடும்பம் மற்றும் குடும்ப நலன்கள் மேலும் வளர்ச்சி பெருகும், இந்த நாளில் அம்மனை வழிபட்டு விரதம் இருந்து பக்தியுடன் வழிபட்டால் 16 வகையான செல்வ வளங்கள் பெருகும் என்று ஐதீகம் உள்ளது..!!