
சொத்துக்கள் வாங்க வேண்டுமா அல்லது சொத்துக்களில் நிலவிக் கொண்டிருக்கும் சிக்கல்கள் தீர வேண்டுமா அனைத்துக்குமே நமக்கு பரிகாரங்கள் பேரு உதவியாக இருந்து வருகின்றது. அந்த வகையில் ஒரு சில பரிகாரங்களை பார்ப்போம்…
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது கனவாகவே இருந்து வருகிறது இதில் பலரது கனவுகள் நிறைவேறுகிறது கனவுகள் வெறும் கனவாகவே இருக்கிறது அப்படிப்பட்டவர்கள்..
முருகப்பெருமானை வணங்க வேண்டும் : ஆனால் பொதுவாக சொல்வதென்றால் நான்காம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாய் மிகவும் பலம் வாய்ந்து இருப்பதால் அவர்களுக்கு சொந்த வீடு மனை உண்டு இருப்பார்கள் நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கொருவர் வீடு அமைய ாமல் அவர் மனையில் அவரால் வசிக்கக்கூட முடியாத சிலை ஏற்படும் அல்லது அந்த வீடு நீண்ட நாளைக்கு வராது என்பார்கள்..
எனவே சொந்த வீடு நிரந்தரமாக அமைய வேண்டுமானாலும் பரிகாரம் தேவையாக இருக்கிறது இதற்கு முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வர வேண்டும் நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர் உண்டு செவ்வாயினுடைய அதி தேவதை முருகன் என்பதால் சொந்த வீடு மனை வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் முருகப்பெருமானை வணங்கி வரலாம்..
செவ்வாய்க்கிழமை வேண்டுதல் : இதற்கு செவ்வாய்க்கிழமை இது ஒரு முருகப்பெருமானை செவ்வரளி மாலை சாத்தி எலுமிச்சை சாதம் நெய்வேத்தியம் செய்து அதனை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி வர வேண்டும் இதனால் விரைவில் வீடு மனை யோகம் கிட்டும் வீடு மட்டுமே என்று இல்லை சொத்துக்கள் சேர வேண்டும் என்றாலும் முருகனை வழிபட்டு வரவேண்டும் இதற்கு கொம்பு தேங்காய் பரிகாரம் ஒன்றையும் செய்து வர வேண்டும். கொம்பு தேங்காயை ஒரு சிவப்பு துணியில் வைத்து அதில் கைப்பிடி பச்சரிசியை போட்டு முடிச்சு போல கட்டி வாசலில் கட்டி தொங்கவிட வேண்டும் வீட்டில் தினமும் விளக்கேற்றும்போது இந்த தேங்காய் முடிச்சுட்டு ஊதுபத்தி காண்பிக்க வேண்டும் இந்த தேங்காய் வருடம் ஒரு முறை மாற்றிக்கொள்ள வேண்டும்..
இறுதியாக இந்த கொம்பு தேங்காயை நிறைந்த வார வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தனை சுகமும் சேர துவங்கிவிடும் என்பது நம்பிக்கையாகும் அதேபோல சொத்துக்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிகாரம் உள்ளது. எனவே ஜாதகத்தில் நான்காம் இடம் சரியாக அமையாவிட்டால் சொத்து பிரச்சினை வரலாம் அல்லது நான்கில் சனி மற்றும் செவ்வாய் இருந்தாலும் சொத்து ரீதியான பிரச்சினைகள் வரலாம் இதற்கு ஸ்ரீ துர்க்கை அம்மனை வணங்கி வர வேண்டும் காரணம் சொத்து பிரச்சனைக்கு நல்ல பலனை வழங்க கூடியவர் துர்க்கை அம்மன்..!!