உங்களுக்கு தலைமுடி அதிகம் கிடைக்கிறதா..? உடலில் இந்த பிரச்சனை இருந்தால் தலை முடி கொட்டுமா..?

நம் உடலில் நம்மை அழகாக காட்டுவதற்கு தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்பொழுது இல்ல காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த தலை முடி கொட்டும் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர்.

குடல் ஆரோக்கியம் என்பது நமது சருமம் மற்றும் தலைமுடியில் உள்ள சில அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. முகப்பரு, எக்ஸிமா ,ரோசாசியா, வறட்சி, போடுது மற்றும் முடி வெளுந்து போகுதல் ஆகியவை இந்த அறிகுறியில் அடங்கும். முடி கொட்டுவதற்கு சாதாரண விஷயம் கிடையாது. அந்த முடி கொட்டுவதில் வெளிப்புறத் தோற்றத்தில் எவ்வளவு பாதிப்பு காணப்படுகிறது அதே அளவிற்கு உடலின் உள்ளேயும் பாதிப்பு இருக்கும். அந்த வகையில் மோசமான குடல் ஆரோக்கியம் நமது சர்மம் மற்றும் தலைமுடியில் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

நமது குடலில் சமநிலை பராமரிக்கப்படாமல் இருப்பதால் வீக்கம், அலர்ஜி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. அது நேரடியாக நமது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது. குடல் ஆரோக்கியம் இருந்தால் சருமம் தெளிவாக இருக்கும். உங்களுக்கு பொதுவாக நீர் ஏற்றம் கிடைத்துள்ளது என்பதை அது உறுதி செய்கின்றது. குடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் அதில் வீக்கம் ஏற்பட்டுகிறது. இதனால் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல் போகிறது. அதன் விளைவாக சர்மம் மற்றும் தலைமுடி சிக்கல் ஏற்படுகின்றது.

உண்மையான அழகு என்பது உட்புறத்தில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. பளபளப்பான சர்மம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் உங்கள் குடலின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும்.

Read Previous

மருந்துகளும் இல்லை மருத்துவ உபகரணங்களும் இல்லை..!! கள்ளக்குறிச்சி மருத்துவமனை விளக்கம்..!!

Read Next

அதிக அளவில் கோழிக்கறி சாப்பிடும் நபரா நீங்கள்..? அதில் இந்த பகுதி மட்டும் சாப்பிடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular