
இந்த காலத்தில் பலரிடம் நாம் காண கூடிய ஒன்று தான் தொப்பை. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகளும் செய்யும் வேலையும் தான். அதனால் உடற்பயிற்சி செய்து அனைவரும் தொப்பையை குறைக்க பாடுபடுவார்கள்.
அனால், உடற்பயிற்சி மட்டும் எப்படி அதுக்கு வழி கொடுக்கும். உடலில் சேரும் கொழுப்புகளை நாம் உணவு மூலம் குறைக்க வேண்டும். அப்படி குறைக்க சிறந்த முறையை தான் இப்பொழுது காண போகிறோம். இந்த ஜூஸை தினமும் குடித்தால் வெறும் மூன்று நாட்களில் நமது உடல் கொழுப்பு குறைவதை நம்மால் காண முடியும்.
சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்று பார்க்கலாம்.
தேவையானவை:
- 1 வெள்ளரிக்காய்
- 5 எலுமிச்சை
- 1 எலுமிச்சங்காய்
- 15 புதினா இலைகள்
- 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2.5 லிட்டர் தண்ணீர்
செய்யும் முறை:
ஒரு வெள்ளரிக்காய்யை எடுத்து, 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை பொடுசாக வெட்டிப் போடவும். மேலும் அதில் 1.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். பின்பு அதில் இஞ்சி மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், உங்கள் கொழுப்பு குறைவதைக் காணலாம்.