நம்மில் பல பேருக்கு பயணம் செய்யும்பொழுது வாந்தி வருவது இயல்பாகும். அப்படி வரும் வாந்தியினால் நம்மால் பயணத்தையும் மன நிம்மதியோடு அனுபவிக்க முடியாது. மேலும் அதனால் மற்றவர்களுக்கும் தொந்தரவு வந்து விடுமோ என்று நாம் சங்கடப்படுவோம். இப்படி பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
பயணம் செய்வதற்கு முன்பாக அதிக மசாலா எண்ணெய் கலந்த காரமான உணவுகளை சாப்பிடுவதில் இருந்து தவிர்க்க வேண்டும். சீக்கிரம் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அது மட்டும் இலலாமல் நமது உடலை நேராக வைத்து அமர வேண்டும். நாம் செல்லும் வாகனம் எந்த திசையில் போகிறதோ அதே திசையை நோக்கித்தான் நாம் உட்கார வேண்டும்.
மேலும் ஜன்னலை மூடி வைத்துக் கொள்ளக்கூடாது. வெளிக்காற்று நிச்சயம் நம் மீது பட வேண்டும். பயணம் செய்யும்பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது மேலும் புத்தகங்களையும் படிக்கக்கூடாது. வாந்தி வரும் உணர்வை கட்டுப்படுத்த இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சாப்பிடுவது நல்லது. நமது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல வாசனை உடைய பொருட்கள் நம்மிடமிருந்தால் வாந்தி வரும் உணர்வு கம்மியாகும். வாந்தி வரும் உணர்வை கட்டுப்படுத்த அருகில் இருப்பவர்களிடம் நன்கு பேசி சிரித்து வருவதும் பாடல் பாடி வருவதும் ஒரு சிறந்த வழியாகும். எதற்கோ மருத்துவரை சந்தித்து இந்த பிரச்சனைக்கு மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த பதிவில் கூறியதை சரியாக செய்தால் வாந்தி வரும் உணர்விலிருந்து நாம் சுலபமாக தப்பிக்கலாம்.




