
பொதுவாக பெண்கள் தலை முடிக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருவார்கள். ஆனால், தலை முடியில் பேன் தங்கிவிட்டால் அது பெண்களுக்கு பெரும் சிக்கலாக அமைகிறது. பேன் வராமல் இருக்க எவ்வளவு தான் முயற்சித்து வந்தாலும், தலையிலிருக்கும் பேன் எளிதில் போகாது. இதற்கு தீர்வாக, வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே பேனை எப்படி ஒழிப்பது என்பதை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
தலையில் பேன் தாங்காமல் இருக்க, தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறை தலை முடியை அலச வேண்டும். மேலும், கருஞ்சீரகத்தை வறுத்து, அதனை அரைத்து பொடி செய்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து வைத்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயில் போட வேண்டும். இந்த எண்ணெய்யை தினம்தோறும் தேய்துவருவதால், தலைமுடி கருமையாகவும் இருக்கும், பேன் தொல்லையும் இருக்காது.