
சென்னை ஆர்.ஏ.புரத்தில் இன்று (ஜூலை 22) முத்தமிழ்ப் பேரவை இசை விழா கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ்ப் பேரவையின் 42-ம் ஆண்டு இசை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார். விருதுகள் வாங்கிய அனைவரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து சென்றனர். மேலும், இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழ்நாடு மக்களை ஏமாற்றி விடலாம் என சிலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். ஏமாற்றிவிடலாமென தப்புக்கணக்கு போடுவோருக்கு தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் பாடம் புகட்டுவர்” என தெரிவித்துள்ளார்.