உங்களுக்கு 30 வயதுக்குள் நரைமுடி வந்துவிட்டதா..!!அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினை சந்தித்துவரும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இவை உணவு முறை, பழக்கம் வாழ்க்கை முறை மாற்றம், கெமிக்கல் ஷாம்புகள் பயன்படுத்துதல், ஜீன் குறைபாடு உள்ள பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த இளநரை பாதிப்பை சரி செய்ய இயற்கை வழியை பின்பற்றுவது மிக நன்று. அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஹேர்டை தயார் செய்து தலைக்கு உபயோகித்து வருவதன் மூலம் இளநரையை நிரந்தரமாக கருப்பாக்கி விட முடியும்.

தேவையான பொருட்கள்

  • கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
  • செம்பருத்தி இலை -ஒரு கைப்பிடி
  • அவுரி இலை- ஒரு கைப்பிடி
  • செம்பருத்தி பூ இதழ்- இரண்டு கைப்பிடி (மகரந்தம் நீக்கியது)
  • பீட்ரூட் -1 (தோல் நீக்கி நறுக்கியது)
  • நெல்லிக்காய் -ஒரு கைப்பிடி (விதை நீக்கியது)
  • கொட்டைப்பாக்கு- அரை கைப்பிடி
  • மருதாணி- அரை கைப்பிடி
  • தேயிலை தோல்- அரை கைப்பிடி

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்து காற்று புகாத டப்பாவில் சேமித்து கொள்ளவும்.

அடுத்த அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து தயார் செய்து வைத்துள்ள பொடியில் ஐந்து தேக்கரண்டி அளவு சேர்த்து கருப்பாகும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

அடுத்து இதை ஒருநாள் முழுவதும் ஆறவிட்டு மறுநாள் தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் தலையை அலசிக் கொள்ளவும் இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தோம் என்றால் நரைமுடி அனைத்தும் கருமையை மாறிவிடும்.

Read Previous

உங்களுக்கு இருமல் சளி பிரச்சனையா..? கொள்ளை வைத்து குணப்படுத்தலாம் வாருங்கள்..!!

Read Next

12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு..!! உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular